திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க,
வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி,
நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாம் கடவுளர் போற்றப் பொலிவது அத் திருமலைப் புறம்பு.

பொருள்

குரலிசை
காணொளி