திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி
ஐயர், வீற்றிருக்கும் தன்மையின் ஆலும், அளப்பரும் பெருமையின் ஆலும்,
மெய் ஒளி தழைக்கும் தூய்மையின் ஆலும், வெற்றி வெண்குடை அந பாயன்
செய்ய கோல் அபயன் திருமனத்து ஓங்கும் திருக் கயிலாய நீள் சிலம்பு.

பொருள்

குரலிசை
காணொளி