நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர்; நீறு அணி மேனியர்; அநேகர்
பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார்; பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்;
மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அக் கயிலைமா