திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தள, வார்
ஏலப் பொழிலணி சண்பையர் கோனை, இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தன நற்றிமிழே
போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே.

பொருள்

குரலிசை
காணொளி