ஒழியா(து) இன்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின; கலைமா னொன்றின;
பழிமேல் கொண்டது நமர்தே ரன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே.