இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி;
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.