திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்அரன் - கழல்மேல்
அணிதரு சுந்தரம் மலிதமிழ் விரகன், - பிறைதோய்

செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் - திகழ்சீர்த்
திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் - கழிசேர்

எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் - றிலைபோய்
இனமும் அடைந்திலை; கூர்இடரோடிருந் - தனையால்;

உறுதுயர் சிந்தையி னூடுத வினர்எம் - தமர்போல்
உமரும் அகன்றன ரோ? இது உரைவண் - குருகே.

பொருள்

குரலிசை
காணொளி