எழுகுலவெற்பிவை மிடறி லடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை
முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலக னிணைக்கழல்
தொழுது வழுத்திய பிறகொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே.