பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்,
பைந்தரள நன்சிவிகை, செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம்
கண்ட(து)அரு கந்தர்குல மொன்றிமுழு துங்கழுவி லேறக்
கறுத்தது வினைப்பயன், மனத்திலிறை காதலது அன்றி
விண்டதுவும் வஞ்சகரை; மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே.