1344. வன்பகை யாமக் குண்டரை வென்றோய்!
மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்;
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்(டு)
அன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.