வகைதகு முத்தமிழ் ஆகரன், மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன், வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி, செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம், மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே; மணி
நகைஎழி லிற்குற மா(து) உன(து) அருமை நினைக்கிலள்; நீ இவண்
நசையின் முழுப்பதி ஆதல்முன் நணுகல்; இனிக்கிரி வாணனே.