உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி
உனதுமனம் ஆர முழுவதும்அ தாக
அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்
அழகி(து);இனி, யான்உன் அருள்புனைவ தாகப்
பெறுதிஇவை; நீஎன் அடிபணிதல், மேவு
பெருமைகெட நீடு படி(று);ஒழி; பொன் மாடம்
நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்
நனிபுகலி நாத! தமிழ்விரக! நீயே