அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில்,
நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க,
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற,
வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே.