மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறுமு மிவள்செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செங்கை திகழுங் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே.