இனியின் றொழிமினிவ் வெறியும், மறியடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்
நசையுண்(டு) அதுநரை முதுபெண்டீர்!
புனிதன் புகலிய ரதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறு மரவிந்தம்
பனிமென் குழலியை யணிமின்; துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே.