திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும்
தண் தரள வெண் கவிகைத் தார் வளவர் சோணாட்டில்
வண்டு அறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர்.

பொருள்

குரலிசை
காணொளி