திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போன அதிசூரன் போரில் அவர்க்கு அழிந்த
மானம் மிக மீது ஊர மண் படுவான் கண் படான்;
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே.
ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்.

பொருள்

குரலிசை
காணொளி