பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெங் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ, பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் செங் கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன.