திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத்
தண் நகை வெண் முகை மேவு சுரும்பு; தடஞ்சாலிப்
பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின்
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம்.

பொருள்

குரலிசை
காணொளி