பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எம் மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடைப் பொதுவர் தம் மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வரும் தலைவர், அம் மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு செம் மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார்.