திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மருவிய கால் விசைத்து அசையா; மரங்கள் மலர்ச் சினை சலியா;
கருவரை வீழ் அருவிகளும் கான் ஆறும் கலித்து ஓடா;
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா;
இரு விசும்பின் இடை முழங்கா; எழு கடலும் இடை துளும்பா.

பொருள்

குரலிசை
காணொளி