பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார்.