பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்; புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் தவம் நின்று தடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று சிவன் எந்தை கண்டம் தன்னைத் ‘திரு நீல கண்டம்’ என்பார்.