திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கற்பு உறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்பு உற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய,
இல் புறம் பொழியாது அங் கண் இருவரும் வேறு வைகி,
அன்பு உறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி