திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து, நான் வந்து அணைந்து அதற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும்; சிறுவனை யான்
அந்த முதலை வாய் நின்றும் அழைத்துக் கொடுத்தே அவிநாசி
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார்; சென்றார் இடர் களைவார்.

பொருள்

குரலிசை
காணொளி