திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய்! உனை அன்பால்
திருஉலாப் புறம் பாடினேன்; திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்;
மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர்; அன்பரும் கேட்பித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி