பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய செய்கையில் நாள் பல கழிந்தபின் அரசர்கள் முதல் சேரர் தூய மஞ்சனத் தொழிலினில் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர் பாய கங்கை சூழ் நெடும் சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்து எய்தும் சேய நல்நெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களம் தன்னில்.