பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம், வெவ் விடம் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கு, ‘இங்கு இவ் வினை விளைந்தவாறு?’ என்று இடர் உறும்; இரங்கும்; ஏங்கும்; ‘செவ்விது என் செங்கோல்’ என்னும்; தெருமரும்; தெளியும்; தேறான்.