பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா நிலம் காவலன் ஆவான் மன் உயிர் காக்கும் காலைத் தான் அதனக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால், ஊனம் மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர் தம்மால், ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன் ஓ?