திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கட கரி துறையில் ஆடும்; களி மயில் புறவில் ஆடும்;
அடர் மணி அரங்கில் ஆடும்; அரிவையர் குழல் வண்டு ஆடும்;
படர் ஒளி மறுகில் ஆடும்; பயில் கொடி கதிர் மீது ஆடும்;
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால்.

பொருள்

குரலிசை
காணொளி