திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண் உறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்
மண் இடை இறு கால் மேன் மேல் வந்து எழுந்தது போல் தோன்றத்
தண் அளிக் கவிகை மன்னன் தானை பின் தொடரத் தான் ஓர்
அண்ணல் அம் புரவி மேல்கொண்டு அரச மா வீதி சென்றான்.

பொருள்

குரலிசை
காணொளி