பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச் சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்கு உற்றது அன்றே.