திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச்சிற் றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்(து) ஓடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோ,வயன் மாலினொ(டு) உம்பர்தம் நாயகற்கே.

பொருள்

குரலிசை
காணொளி