பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்; புயல்மறந்த கன்னல்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற்(கு) அன்றுபுன்கூர் மன்னு மழைபொழிந்(து) ஈரறு வேலிகொண் டாங்கவற்கே பின்னும் மழைதவிர்த்(து) ஈரறு வேலிகொள் பிஞ்ஞகனே.