திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செயும்? காமனன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன்; விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்; வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலனந் நாள்நின் றுதையுணா விட்டனனே.

பொருள்

குரலிசை
காணொளி