திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடுக்கிய சீலைய ராய்,அக லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ(டு) ஊணிரப் பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.

பொருள்

குரலிசை
காணொளி