திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கழலும் பசுபாசர் ஆம்இமை யோர்தங் கழல்பணிந்திட்(டு)
அழலு மிருக்குந் தருக்குடை யோர்,இடப் பால்வலப்பால்
தழலும், தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்
சுழலு மொருகா லிருகால் வரவல்ல தோன்றல்களே.

பொருள்

குரலிசை
காணொளி