திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொருந்திய ஞானத் தமிழா கரன்பதி, பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையிற் காகூ கழுமலமென்(று)
இருந்திட வாமென்று வானவ ராகி யியங்கியதே.

பொருள்

குரலிசை
காணொளி