திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
உறுமுந்த முன்னே உடையாமல், இன்னம்
உறுமுந்த முன்னே யுடையா - உறுமும்தம்
ஒரைந்(து) உரைத்துஉற்று உணர்வோ(டு) இருந்தொன்றை
ஒரைந் துரைக்கவல்லார்க் கொன்று.
தனி வெண்பா
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல;
ஒன்றைப் பகரில் ஒருகோடி; ஒன்றைத்
தவிராது உரைப்பார் தளரா; உலகில்
தவிரார் சிவலோகந் தான்.