திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரும் மணி மாளிகை உள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்
சீர் கொள் நிதி அம் எண் இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல்
பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி