பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே அன்பு பெருகத் தழுவ, விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ, இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதுஅலைவார் போல் என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்.