திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று
பொன் ஏர் சடையார் திருநடம் செய் புலியூர்ப் பொன் அம்பலம் இறைஞ்சித்
தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பன் என விரும்பி,
நல் நீர் நாட்டுச் செல நயந்தார்; நாமச் சேரர் கோமானார்.

பொருள்

குரலிசை
காணொளி