திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ்ச் சொல் மாலைக் கேட்பிக்க
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்
செம்பொன் மணி மன்றினில் எடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த ஒலி தாமும் எதிரே கேட்பித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி