திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருளால், வருநஞ்சம் உண்டுநின் றாயை, அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல, யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன்;
இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி