பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது சீர் ஆர் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் பார் ஆதரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார்.