திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத்து முகம் உடையாள் நம் பராசத்தி
வைத்தனள் ஆறு அங்க நாலுடன் தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேர் இழை கூறே.

பொருள்

குரலிசை
காணொளி