திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாகம் பரா சத்தி பைம் பொன் சடை முடி
ஏகம் இருதயம் ஈர் ஐந்து திண்புய
மோக முகம் ஐந்து முக் கண் முகம் தொறும்
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே.

பொருள்

குரலிசை
காணொளி