திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடிப்
பாசடைத் தடம் தாமரைப் பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.

பொருள்

குரலிசை
காணொளி