திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சீதம் மலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையும்
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொளக் குறுகி.

பொருள்

குரலிசை
காணொளி