திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என் கொல் நின் பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சிப் போகம் ஆர்த்த பூண் முலையினாள்